ஆளுமை:உதயகுமார், நாகப்பன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:12, 1 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உதயகுமார்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உதயகுமார்
தந்தை நாகப்பன்
தாய் -
பிறப்பு 1966.05.16
ஊர் கிளிநொச்சி
வகை நடனக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயகுமார், நாகப்பன் (1966.05.16 -) கிளிநொச்சி குமாரசாமிபுரத்தை வசிப்பிடமாக கொண்ட நடன கலைஞர். இவரது தந்தை நாகப்பன்: தாய் லட்சுமி. கரகம் சார்ந்த கலைஞர்களுள் இவர் முதன்மையானவர்.

இவர் தற்போது சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புன்னைநீராவி அலுவலகத்தில் சேவையாற்றி வருகின்றார். இவர் "கரகம் மட்டுமன்றி "சிலம்பு", "தீப்பந்த ஆட்டம்", டிஸ்கோ ஆட்டங்களிலும் அதன் நுட்பங்களை அறிந்து அவற்றை சிறுவயது முதலே பழகியிருக்கின்றார். அத்துடன் பல்வேறு வகையான கரகக்கலையின் ஆட்டமுறைகளை ஆடுவதில் தேர்ச்சி உடையவராக விளங்குகின்றார்.

இவர் பல்வேறு மேடைகள் கரக கலையை ஆடி புகழ் பெற்றவர். 2014 ஆம் ஆண்டில் கண்டாவளை பிரதேச செயலக கலாசார பேரவை நடத்திய கிராமிய பயிற்சி பட்டறையில் "கரகக்கலை தொடர்பான பயிற்சிக்கான வளவாளராகவும் தொழிற்பட்டிருந்தவர். இவரது சகோதரி ஒருவரும் கரகாட்டத்தை ஆடிவருவதும் குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 34-35