ஆளுமை:குணபாலசிங்கம், முருகர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:29, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குணபாலசிங்கம் |
தந்தை | முருகர் |
தாய் | - |
பிறப்பு | 1943.04.06 |
ஊர் | கிளிநொச்சி |
வகை | நாடகக்கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குணபாலசிங்கம், முருகர் (1943.04.06-) கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை முருகர். இவர் ஆரம்பக்கல்வியை கிளி/ஆனையிறவு சிங்கள தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார்.
இவர் தட்டுவன்கொட்டி பிள்ளைமட கன்ணகி அம்மன் ஆலயத்து பொங்கல் உற்சவத்து கோவலன் கூத்தில் 'காத்தான்', 'சின்னான்', 'காளி', 'விஷ்ணு' என பல பாத்திரங்களில் நடித்தும் சில கட்டங்களை ஆற்றுப்படுத்தியிருந்தவராகவும் விளங்குகிறார்.
இவர் 'தட்டுவன்கொட்டி அம்பாள் கலாமன்ற' உறுப்பினராகவும், கூத்து ஆற்றுகைகளில் உடுக்கடித்தல், பக்கப்பாட்டு பாடுவதிலும் ஈடுபட்டிருந்தார்.
இவர் 2011 இல் கிளி/தருமபுரம் மகா வித்தியாலயத்தில் நடத்திய முதலாவது பிரதேச கலாசார விழாவில் 'கலை ஒளி' விருதினைப் பெற்றுக் கொண்டார்.
வளங்கள்
- நூலக எண்: 82754 பக்கங்கள் 13-14