ஆளுமை:விசுவலிங்கம், செல்லப்பா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:44, 25 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விசுவலிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விசுவலிங்கம்
தந்தை செல்லப்பா
தாய் -
பிறப்பு 1907
ஊர் கிளிநொச்சி, செட்டியார் குறிஞ்சி
வகை கூத்துக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விசுவலிங்கம், செல்லப்பா (1907 - ) கிளிநொச்சி, செட்டியார் குறிஞ்சியைச் சேர்ந்த கூத்துக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. இவர் சின்னத்தம்பி அண்ணாவிற்கு ஓரிரு வயது இளமையாக இருக்க வேண்டும் என்பது முதியவர்கள் கருத்து அவ்வாறாயின் இவர் பிறந்த ஆண்டு 1907 ஏனெனில் இவருடைய காத்தான் கூத்து நடித்த செல்லப்பா கந்தையா பிறந்த ஆண்டு 1911 இவருக்கு 10 வருடங்கள் மூத்தவராக இருந்துள்ளார்.இவர் தனது மச்சான் முறையான சின்னத்தம்பி அண்ணாவியுடன் இணைந்து பழக்கி மேடையேற்றிய சிந்து நடை கூத்தினை அவருடைய காலத்துக்கு பிற்பாடு தானே முன்னின்று நடத்தி வெற்றி கண்டார் .1965 காலப்பகுதியில் இவருடைய காத்தான் கூத்து கந்தையா ஜெயராஜா சோமசுந்தரம் பாத்திரமேற்று நடித்தார் இவருடைய தகப்பனார் செல்லப்பா கந்தையா நடுக்காத்தான் பாத்திரமேற்று நடித்தார்.

1967ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பல்லவராயன்கட்டு கரியாலைநாகபடுவான் கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றங்கள் செய்யப்பட்டமையினால் இவர் கரியாலைநாகபடுவான் சென்றார் அங்கும் காத்தான் கூத்தினை பழகி மேடையேற்றினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொப்பி எடுத்து நாடகம் பழக்கக் கூடாது என்கின்ற கலை தனித்துவ ஓர்மத்தில் தானாகவே சத்தியவான் சாவித்திரி , அரிச்சந்திர மயான காண்டம் போன்ற நாடகங்களை எழுதி பூநகரி பிரதேசத்தில் பல பகுதிகளிலும் அரங்கேற்றியமையை கரியாலைநாகபடுவான் பெரியவர்கள் கூறும் போது ஆச்சரியமடைந்தேன்.செல்லியாதீவு அம்மன் கோவில் உற்சவம் ஆண்டுதோறும் இவருடைய கூத்துக்களினால் உச்சம் பெறும் என்கிறார்கள். மக்கள் இதனைப் பார்வையிடுவதற்கு இறை பக்தர்கள் கொழும்புத்துறையில் இருந்து தோனி மூலமாகவும் முழங்காவில் கரியாலைநாகபடுவான் போன்ற தூர இடங்களுக்கு மாட்டுவண்டியில் வருகை தருவார்கள்.

ஈற்றில் கலை பொக்கிஷங்களை தன் மகன் வேலன் செல்லத்துரை இடம் கையழித்து இறைபதம் அடைந்தார்.