ஆளுமை:செல்லத்துரை, சிவகுரு
பெயர் | செல்லத்துரை |
தந்தை | சிவகுரு |
தாய் | - |
பிறப்பு | 1944.12.05 |
இறப்பு | - |
ஊர் | கிளிநொச்சி |
வகை | நாதஸ்வரகலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லத்துரை, சிவகுரு (1944.12.05 -) கிளிநொச்சி, சோறன்பற்றைச் சேர்ந்த நாதஸ்வரகலைஞர். இவரது தந்தை சிவகுரு. 16,17 வயதில் நுணாவில் குமாரசுவாமியிடம் முறைப்படி இவர் சங்கீதம் கற்றுகொண்டார் மற்றும் நாதஸ்வரத்தினை ஈச்சமோட்டை ஜெயராசாவிடம் முறைப்படி தெளிவுற கற்றுகொண்டார். பின்னர் இவர் கச்சாயில் இயங்கிய கண்ணகி நடன குழுவுடன் இணைந்து, சின்னமேளக் கச்சேரிகளுக்கு வாசித்ததாகவும் அத்துடன் கச்சாய் அம்மன் கோவிலில் இடம்பெற்ற சத்தியவான் சாவித்திரி,காத்தவராயன் கூத்து போன்றவற்றிற்கு ஆர்மோனியம் வாசித்ததார்.அளவெட்டி சாந்தன் இசைக்குழு உடன் இசைக்கச்சேரி, 2013ல் கனகாம்பிகை குளம் அம்மன் கோவில், நித்தியா பற்றி பிள்ளையார் கோவில்,நெல்லிப்பள்ளம் பிள்ளையார்,சீராவில் பிள்ளையார், சோறன்பற்று அம்மன், கைதடி இடுக்குத்தோட்டம் தோன்றவேண்டும் திருவிழா காலங்களில் வாசித்துள்ளதுடன் அங்கு ஆலய நிர்வாகத்தினரால் கெளரவிக்கப்பட்டார்.
வவுனியா பண்டாரிக்குளம் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு சென்று நாதஸ்வரக் கலைஞராக செயற்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு பச்சிலைப்பள்ளிபிரதேச செயலக திறப்பு விழாவின் போது சிறப்பாக நாதஸ்வரம் வாசித்து பிரதேச செயலகத்தினால் பாராட்டுகளையும் பெற்றார். இன்று வரை நாதஸ்வரக் கலைசார்ந்து செயற்ப்பட்டு வருகிறார்.