உதவி:பெயர்வெளிகள்
நூலகம் தளம் மீடியாவிக்கி மென்பொருளினால் இயங்குகிறது. மீடியாவிக்கி மென்பொருள் பல்வேறு பக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்காக பெயர்வெளிகள் என்னும் ஒன்றை கொண்டுள்ளது. இதன்படி ஒரு பக்கத்தை அதன் உள்ளடக்கத்திற்கேற்ப ஒழுங்குபடுத்தலாம். ஒரு குறிப்பிட்ட்ட பெயர்வெளிகளில் உள்ள அனைத்துப் பக்கங்களையும் ஒரு சேர நிர்வாகித்தல் எளிது. பக்கங்களின் தோற்றம், அணுக்கம் போன்றவற்றை ஒரு பெயர்வெளியின் தன்மைகளை மாற்றுவதன் மூலம் மிக எளிதாக மாற்ற இயலும். முதன்மை பெயர்வெளியை தவிர பிற பெயர்வெளிகளில் பக்கங்களை இயற்ற பக்கத்தலைப்புக்கு முன் பெயர்வெளியின் பெயரைக் கொடுத்தல் வேண்டும்.
மீடியாவிக்கி மென்பொருளில் இயல்பாக இருக்கும் பெயர்வெளிகளையும் சேர்த்து சில கூடுதல் பெயர்வெளிகளையும் இத்தளம் கொண்டுள்ளது. பெயர்வெளிகளின் நோக்கம் அவற்றை எந்தெத்த பக்கங்களுக்கு பயன்படுத்துவது போன்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
முதன்மை பெயர்வெளி
நூல்கள் தொடர்பான பக்கங்கள் அனைத்து முதன்மை பெயர்வெளியில் உருவாகுதல் வேண்டும்.
நூலகம்
இப்பெயர்வெளியில் தளம் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டுதல் போன்ற கருத்துகள் மட்டுமே வெளியிடப்படும். உதாரணமாக காண்க: நூலகம்:கலந்துரையாடல்.
உதவி
உதவி பக்கங்கள் அனைத்தும் உதவி பெயர்வெளியின் கீழ் இடப்படும். எ.டு உதவி:அண்மைய மாற்றங்கள். ஆகவே உதவிப்பக்கங்கள் இயற்ற விரும்பினால் இப்பெயர்வெளியில் இயற்றவும்.
வாப்புருக்கள்
வார்ப்புருக்கள் அனைத்தும் இப்பெயர்வெளியின் கீழ் இடப்படுதல் வேண்டும்.
மீடியாவிக்கி
இத்தள இடைமுக உரைகள் அனைத்தும் இப்பெயர்வெளியின் கீழ் இருக்கும். இவற்றை தொகுக்க தள நிர்வாக தரம் வேண்டும்
சேகரம்
சேகரம் திட்டம் தொடர்பான பக்கங்கள் அனைத்தும் இப்பெயர்வெளியில் இயற்றுதல் வேண்டும்