ஆளுமை:ஹாபீஸ், ஜே. எம்.

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:49, 25 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜீவாஹீர் முஹம்மது ஹாபீஸ்
பிறப்பு 1951.06.26
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜீவாஹீர் முஹம்மது ஹாபீஸ் (1951.06.26 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், தொலைக்கல்விப் போதனாசிரியர். மடவளை மதீனா தேசிய பாடசாலை, கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், மகரகம தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கமான 'பணி செய்வோம்' விஞ்ஞானச்சுடர் சஞ்சிகையில் 1975 இல் பிரசுரமானது. தொடர்ந்து ஜே. எம். ஹாபீஸ், மடவளை ஹாபீஸ் ஆகிய புனைபெயர்களில் பல பத்திரிகையிலும் சஞ்சிகையிலும் 150 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 50 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 'கல்வியியற் செயற்பாடுகள்' (அனுபவத் தொகுப்பு) இவரது நூல். இவர் தேன்துளி சஞ்சிகையின் மொழிபெயர்ப்பு ஆசிரியராகவும் தினபதி, சிந்தாமணி, லேக்ஹவுஸ் பத்திரிகைகளின் நிருபராகவும் புகைப்படக்கலைஞராகவும் செயலாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 123-125

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஹாபீஸ்,_ஜே._எம்.&oldid=408785" இருந்து மீள்விக்கப்பட்டது