ஆளுமை:றிப்னா, றியாஸ்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:38, 25 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றிப்னா
தந்தை றஹீமுத்தீன்
தாய் ஆயிஷா வீவி
பிறப்பு 1993.07.14
ஊர் அம்பாறை பாலமுனைக் கிராமம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றிப்னா, றியாஸ் (1993.07.14) அம்பாறை மாவட்டத்தில் பாலமுனைக் கிராமத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தையின் பெயர் றஹீமுத்தீன், தாயின் பெயர் ஆயிஷா வீவி, இவரது கணவரின் பெயர் றியாஸ் ஆகும். இளம் நிலா எனும் புனைப்பெயரில் ஆக்கங்களை எழுதி வருகிறார். ஆரம்பக்கல்வியை பாலமுனை அல்/ஹிதாயா மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை பாலமுனை அக்/மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திலும் கற்றார். தற்பொழுது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொதுக்கலை இளமாணி வெளிவாரி பட்டப்படிப்பினை கற்று வருகிறார்.

பாடசாலைக் காலத்தில் இருந்தே தமிழ் தினப் போட்டி நிகழ்வுகளில் கவிதைகளையும், குரு நாடக ஆக்கங்களையும் எழுதி பல வெற்றிச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், தினக்குரல், மெட்ரோ நியூஸ் போன்ற நாளிதழ்களில் வெளிவந்துள்ளதோடு பல மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. முகநூல் போட்டிகளினூடாக கவிதைகளை எழுதி பல வெற்றிச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

அத்தோடு மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர், பாடலாசிரியர் திரு.வித்யாசாகரினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பங்கு பற்றி கவித்தென்றல் இலக்கிய முரசு எனும் விருதினையும் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பல கவியரங்குகளிலும் பங்கு பற்றியுள்ளார். அவை முகநூல் தொலைக்காட்சிகளான வியூகம் டீவி, தாருஸபா டீவி போன்றவற்றில் நேரலையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூகம், பெண்ணியம், வாழ்க்கை, நட்பு, வலி, வறுமை, காதல், கண்ணீரென இவரின் கவிதைகள் உணர்வுபூர்வமாகவும், யதார்த்தமான வரிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

கவிதாயினி றிப்னா றியாஸ் இரவை எழுதிடும் பகல் எனும் தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை விரைவில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


விருதுகள்

கவித்தென்றல் இலக்கிய முரசு விருது.

குறிப்பு : மேற்படி பதிவு றிப்னா, றியாஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:றிப்னா,_றியாஸ்&oldid=408755" இருந்து மீள்விக்கப்பட்டது