ஆளுமை:புரட்சிக் கமால்
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:14, 21 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மீராசாகிபு முகம்மது சாலி |
தாய் | மரியங்கண்டு |
பிறப்பு | 1928.07.07 |
இறப்பு | 1996.03.15 |
ஊர் | ஏறாவூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மீராசாகிபு முகம்மது சாலி (1928.07.07 - 1996.03.15) ஏறாவூரைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தாய் மரியங்கண்டு. இவர் 1952 - 1953 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று வெளியேறி கொழும்பில் உள்ள தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆசிரியப் பணியாற்றி வந்துள்ளார்.
இவரது முதலாவது சிறுகதையான மனிதன் 1945 இற்கு முன்பு வெளிவந்தது. இவர் முஸ்லிம் தாரகை என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். இவரது ஆக்கங்கள் சுதந்திரன், தினகரன், வீரகேசரி ஆகிய ஈழத்து இதழ்களிலும் முஸ்லிம் முரசு, திராவிட நாடு, மலாய நண்பன் ஆகிய வெளிநாட்டு இதழ்களிலும் வெளிவந்துள்ளன.இவரது புரட்சிக் கமால் என்ற நூல் 1963.08.10 இல் கண்டியில் வெளியிடப்பட்டது. இவர் இவரது திறமைக்காகக் கவிமணி, கவிப் பரிதி ஆகிய கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15417 பக்கங்கள் 297-304