ஆளுமை:பாத்திம், காலித்
பெயர் | பாத்திம் |
தந்தை | டாக்டர் டி.ஏ.சாலிஹ் |
தாய் | ஸபீனா அக்பர் |
பிறப்பு | 1917.04.19 |
ஊர் | கொழும்பு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாத்திம் காலித் (1917.04.19) கொழும்பில் பிறந்த பெண் ஆளுமை. இவரின் தந்தை டாக்டர் டி.ஏ.சாலிஹ்; தாய் ஸபீனா அக்பர். கொழும்பு பிளவர் றோட்டிலுள்ள ஸி.எம்.எஸ்.பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார். ஆங்கில மொழியிலும் சித்திரம் வரைதலிலும் திறமையை வெளிப்படுத்தினார்.
சாதாரண தமிழ் மொழி ஆசிரிய பயிற்சிக்குக் கூட முஸ்லிம் பெண்கள் கற்காத காலமான 1936ஆம் ஆண்டு பாத்திம் காலித் கொழும்பிலிருந்து அரசினர் ஆங்கில ஆசிரிய பயிற்சிக் கல்லூரி சென்று இருவருடப் பயிற்சியை முடித்து ஆங்கில டிப்ளோமா ஆசிரியையாக 1938ஆம் ஆண்டு ஹட்டனிலுள்ள சென் கேப்ரல் கொன்வன்டில் கற்பித்தார். இலங்கையின் முதல் முஸ்லிம் ஆசிரியை திருமதி பாத்திம், காலித் ஆவார். தொடர்ந்து பிரதித் தலைமை ஆசிரியையாகவும் நியமிக்கப்பட்டார். 1957ஆம் ஆண்டு அளுத்கம பெண்கள் மத்திய கல்லூரி அதிபரான திருமதி பாத்திம் காலித் இங்குள்ள முஸ்லிம் பெண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பதில் அதிபராக நியமிக்கப்பட்டார்.