ஆளுமை:ஆயிஷா, ஜுனைதீன்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:12, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆயிஷா
பிறப்பு
ஊர் மாதம்பை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆயிஷா, ஜுனைதீன் மாதம்பையைச் சேர்ந்த பெண் ஆளுமை. பட்டதாரியான இவர் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையின் 1973ஆம் ஆண்டில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியின் பிரதிகளை எழுதி வந்ததோடு 1976ஆம் ஆண்டு முதல் பெண் தயாரிப்பாளராக இணைந்து கொண்டார். முஸ்லிம் சேவையின் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர்.

நிகழ்ச்சி தயாரிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, அறிவிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் ஆயிஷா, ஜுனைதீன். முஸ்லிம் பெண்கள் கல்வி தொடர்பாக விழிப்புணர்ச்சி பெற வேண்டுமென்று தனது நிகழ்ச்சிகளின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

பிஞ்சுமனம், முதுசம், இலக்கிய மஞ்சரி, முத்தாரம், அருட்சுனை ஆகிய பல இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன் தயாரித்தும் உள்ளார். வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்ட போது தொலைக்காட்சியில் தமிழ் மொழி அறிவிப்பாளராக முதன் முதலில் தோன்றிய அறிவிப்பாளர் இவர்தான். தொலைக்காட்சியில் பல மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

விருது

அரச கலாபூஷண விருது

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆயிஷா,_ஜுனைதீன்&oldid=407352" இருந்து மீள்விக்கப்பட்டது