ஆளுமை:பாலசிங்கம், கந்தையா

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:02, 12 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசிங்கம்
தந்தை கந்தையா
பிறப்பு 1931.08.05
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம், கந்தையா (1931.08.05 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் ஶ்ரீ பார்வதி வித்தியாலயத்திலும் மேல் நிலைக் கல்வியை ஸ்ரான்லிக் கல்லூரியிலும் கற்றார். இவர் நீ. செல்லக்கண்டு, அரியாலையூர் வே. ஐயாத்துரை, வே, க. இரத்தினம் போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்றார்.

இவர் காத்தவராயன் சிந்து நடைக் கூத்து, ஶ்ரீவள்ளி, பதவி மோகம், பூதத்தம்பி, வாலிவதை, ஆரியமாலா, பாஞ்சாலி சபதம், சத்தியவான் சாவித்திரி, கண்ணன் தூது, ராஜாதேசிங், சகோதரபாசம், செஞ்சோற்றுக்கடன், சகோதர விரோதி, மயான காண்டம், கன்னிக்கோட்டை, பவளக்கொடி, பிரகலாதன் ஆகிய பல நாடகங்களில் நடித்ததுடன் இசைத்துறையிலும் ஓவியத்துறையிலும் சிறந்து விளங்கினார். இவர் நிகழ்வுகளில் பண்ணிசை, பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவரது கலைத் திறமைக்காக இவர் முல்லைத்தீவு மக்களால் பண்ணிசைச் செல்வர், மணலாறு முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாக சபையால் முத்தமிழ் வித்தகர், அல்வாய் மனோகரா கானசபாவினால் கலை மகிழ்நன், வடமராட்சி கலாரசிகர்களால் கலைவாருதி, ஶ்ரீ கலைமகள் நாடக மன்றத்தினரால் இசை நாடக மாமணி, வதிரி அபிவிருத்தி நிறுவனத்தினரால் இயல் இசை நாடகச் செல்வர், கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூசணம் வல்வை மக்களால் ஆயகலை வித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 196