ஆளுமை:துரைசுவாமி, வைத்தியலிங்கம்
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:54, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | துரைசுவாமி |
தந்தை | வைத்தியலிங்கம் |
தாய் | கதிராசிப்பிள்ளை |
பிறப்பு | 1874.06.08 |
இறப்பு | 1966 |
ஊர் | வேலணை |
வகை | அரசியல் தலைவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
துரைசுவாமி, வைத்தியலிங்கம் (1874.06.08 - 1966) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் தலைவர். இவரது தந்தை வைத்தியலிங்கம்; தாய் கதிராசிப்பிள்ளை. இவர் வட்டுக்கோட்டைச் செமினரியில் (தற்போது யாழ்ப்பாணக் கல்லூரி) ஆங்கிலக்கல்வியைப் பயின்றார்.
இவர் பொறியியலாளராக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பணியாற்றியவர். இவர் நற்றமிழர், தேசாபிமானி, சைவாபிமானி, சிறந்த வழக்கறிஞர், சமூகத் தொண்டன், கல்வி கூடங்கள் பலவற்றின் தாபகர், சைவ வித்தியா விருத்திச் சங்கம், சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாணச் சங்கம் ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும் செயற்பட்டார்.
இவர் இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ் மகனாவதுடன் ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னனால் அழைக்கப்பெற்று 'சேர்' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 473-480