ஆளுமை:சந்திரசேகரன், பே.

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:47, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரசேகரன்
பிறப்பு 1916.07.22
இறப்பு 2002.10.12
ஊர் வேலணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரன், பே (1916.07.22- 2002.10.12) வேலணையை சேர்ந்த கலைஞர். இசைத்துறையில் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'சங்கீத பூஷணம்' பட்டம் பெற்ற இவர், 1940 இல் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம் பெற்றுப் பணியாற்றி 1948 இல் இலங்கை இணையாசிரியர் சங்கத்தை நிறுவி இசைத்துறைக்கு அளப்பரிய சேவை செய்தவர். வட இலங்கை சங்கீத சபையின் உப தலைவராகப் பணியாற்றிய வரும் இவர், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் இசைப் பாடகராகவும் பணியாற்றியதுடன் 'இசை இலக்கணம்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார். இவர் 'கலாபூஷணம்', 'இசையரசு' ஆகிய கெளரவப் பட்டங்களையும் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 572-573