ஆளுமை:குலராஜ், ஈஸ்வரராஜா
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:28, 15 ஆகத்து 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குலராஜ்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | குலராஜ் |
தந்தை | ஈஸ்வரராஜா |
பிறப்பு | 1951.08.28 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குலராஜ், ஈஸ்வரராஜா (1951.08.28) மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்த ஓவியர். இவரது தந்தை தமிழ்நாடு கலாசேத்திராவில் ஓவியம் பயின்று டிப்ளோமா பட்டம் பெற்ற ஓவியர். தஞ்சாவூர் ஓவியம், துணி ஓவியம், பத்திக் ஓவியம், கலங்கணி என்பவற்றில் சிறப்பு தேர்ச்சிபெற்றவர்.
சென்னை மோகன் டெக்ஸ்டைல்ஸ்யில் பகுதிநேர பத்திக் ஓவியராகவும், தூரதர்சனின் தற்காலிக பகுதிநேர ஓவியராகவும், தேவி வார இதழ், வீரகேசரி சினிமாப் பகுதி என்பற்றில் பிரதம ஓவியராகவும் பக்க வடிவமைப்பாளராகவும் கடமையாற்றினார்.
பாடசாலை மாணவர்களுக்கு அலங்கார ஓவியம் என்னும் பயிற்சி நூலினை வெளியிட்டுள்ளதோடு, ஆசிரியர், மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி வகுப்புக்களை நடத்தியுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகம் உட்பட பல இடங்களில் ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 8470 பக்கங்கள் 52