ஆளுமை:பஞ்சலோகரஞ்சன், மாணிக்கம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:35, 30 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பஞ்சலோகரஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சலோகரஞ்சன்
தந்தை மாணிக்கம்
பிறப்பு 1957.01.04
ஊர் யாழ்ப்பாணம், வளலாய் அச்சுவேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சலோகரஞ்சன், மாணிக்கம் (1957.01.04) யாழ்ப்பாணம் வளவாய் அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர் மானிப்பாய் ஆனைக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது தந்தை மாணிக்கம். பஞ்சலோகரஞ்சன் ஒரு கிராம சேவையாளராவார்.

தனது ஆரம்பக் கல்வியை வளலாய் அமெரிக்க மிசன் பாடசாலையில் கற்றார். பாடசாலைக் காலத்திலேயே கவிதைப் போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களை பெற்றார். 1979ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற எழுந்திரு தோழா எம் துயர் துடைப்போம் என்ற இவரின் கவிதை பலரின் பாராட்டுக்களை பெற்றது. 1981ஆம் ஆண்டு இளைஞர் சேவை மன்றத்தின் கவிதைப் போட்டியில் இணைந்திட வேண்டும் என்ற இவரின் கவிதை அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தினை பெற்றது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் கவிதை உயர்நிலைத் தேர்வில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பவள விழா கவிதைப் போட்டியிலும் முதலாம் இடத்தை இவர் பெற்றார். கவிதையோடு பாடல் எழுதும் திறனையும் கொண்ட இவர் கலாசார அலுவல்கள் தேசிய மரபுரிமை அமைச்சினால் நடாத்தப்பட்ட பாடலாக்கப் போட்டியில் சிறந்த பாடலுக்கான சான்றிதழைப் பெற்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 84