ஆளுமை:பரராசசிங்கம், சிவகுரு

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:21, 30 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரராசசிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரராசசிங்கம்
தந்தை சிவகுரு
பிறப்பு 1937.08.18
ஊர் யாழ்ப்பாணம், நயினாதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரராசசிங்கம், சிவகுரு (1937.08.18) யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த ஆளுமை. இவரது தந்தை சிவகுரு; ஆரம்பக்கல்வியை நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இடைநிலைக் கல்வியை அந்த ஊரின் மகாவித்தியாலயத்திலும் கற்றார். கொழுமபு, வத்தளை ஹுணுப்பிட்டி நல்லம்மா பாடசாலையில் ஆசிரியராக கடமைபுரிந்த இவர் மும்மொழி ஆற்றல் கொண்டவர். 1960ஆம் ஆண்டு எழுதுவினைஞராக சேவையில் இணைந்து கொண்டு அரசாங்க அச்சகத்தில் 30 ஆண்டு காலம் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.

பாடசாலைக் காலத்திலேயே கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். மாணவர் மன்றங்களில் கவிதை வாசிக்கும் இவரின் ஆற்றலை அடயாளம் கண்ட பண்டிதை திருமதி புனிதவதி பரராசசிங்கக் கவிஞன் என்பதன் சுருக்கமான பசிக்கவி எனும் பட்டத்தினை வழங்கிக் கௌரிவித்தார்.

அரசாங்க சேவையில் இருந்த காலத்திலும் ஓய்வு பெற்ற பின்னரும் பாரம்பரியக் கலைகளான கரகம், காவடி, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு முதலானவற்றை பயிற்றுவிப்பதில் சிறப்பான பங்காற்றியுள்ளார். கவியரங்குகளிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியதுடன் கவியரங்குகளிலும் தலைமை தாங்கி நடத்தினார். இவரின் கவிதைகள் நூலுருவாக்கம் பெறாத போதிலும் இவர் எழுதிய பக்தி பாடல்களான பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா திருவூஞ்சற்பா, நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் பஜனைப் பாடல்கள் என்பன நூலுருப் பெற்றுள்ளன. இவரின் ஆக்கங்கள் கவிதைகள், பாடல்கள் என்பன நாளிதழ்களில் வெளிவந்துள்ளன.

நயினாதீவிலுள்ள பல ஆலயங்களிலும் இந்து சன்மார்க்க சங்கம், விவேகானந்தச சபை, திவ்விய ஜீவன சங்கம், நயினாதீவு கலாசாரப் பேரவை முதலானவற்றிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1825 பக்கங்கள் 77
  • நூலக எண்: 11835 பக்கங்கள் 3

வெளி இணைப்புக்கள்