ஆளுமை:சரவணபவன், க

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:50, 26 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரவணபவன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணபவன்
தந்தை கதிரமலை நாதன்
பிறப்பு 1953.03.24
ஊர் வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணபவன்,க (1953.03.24) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்த கலைஞர். நாடகம், நாட்டுக்கூத்து, வில்லிசை, சமயசொற்பொழிவு, நாட்டார் கலைகளில் ஈடுபட்டு வரும் கலைஞராவார். சுதந்திர வாழ்வில் விடிவலைகள், தெய்வீகமும் சமாதானமும் அறம் பொருள் இன்பம் போன்ற நூல்களை பதிப்பித்ததோடு ஊஞ்சல் பாடல்களையும் எழுதியுள்ளார். தொடர் விரிவுரைகள், வானொலி நற்சிந்தனைகள் என பல சமயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

புரவி நடனம் , நாட்டுக்கூத்து வடமோடி கலைகளை ஆடி வருகின்றார். சிறந்த வில்லிசைக் கலைஞராக திகழும் சரவணபவன் அவர்கள் புதுக்கவிதை, நாட்டார் பாடல் போட்டிகளில் தேசிய இளைஞர் சேவை மன்றத்திடமிருந்து பரிசில்களைப் பெற்றுள்ளார். திருவாசகம் முற்றோதல், கந்தபுராணம் படல விரிவுரை , சொற்பொழிவுகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். 11 ஊஞ்சல் பாடல்கள், தெய்வீகமும் சமாதானமும் என பல நூல்களை வெளியிட்டுள்ளார்.


விருதுகள்

கலைமணி

சித்தாந்த வித்தகர்

வளங்கள்

  • நூலக எண்: 8564 பக்கங்கள் 68
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சரவணபவன்,_க&oldid=393418" இருந்து மீள்விக்கப்பட்டது