ஆளுமை:வயிரவநாதன்,பா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:34, 25 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வயிரவநாதன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வயிரவநாதன்
தந்தை பாலகிருஷ்ணன்
பிறப்பு
ஊர் பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வயிரவநாதன்,பா யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்த பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலகிருஷ்ணன்; தான் பிறந்த மண்ணான பருத்தித்துறையை இணைத்து பருத்தியூர் பாலவயிரவநாதன் எனும் பெயரில் எழுதி வருகிறார்.

பாடசாலைக்காலத்திலேயே அரங்கொலி, விஞ்ஞானி எனும் கையழுத்துச் சஞ்சிகைகளை ஆரம்பித்து சித்திரங்களை வரைந்து வந்துள்ளார். பிரபஞ்ச வாழ்க்கைத் தத்துவம் எனும் தத்துவக் கவிதையினை பதினைந்து வயதில் எழுதியுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

ஆரம்பத்தில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் பின்னர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பிரதம எழுதுவினைஞராகவும் நிர்வாக உத்தியோகத்தராக பதவிநிலை அலுவலராகவும் கடமையாற்றி 45 வருட கால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் தினக்குரல், தினகரன், வீரகேசரி ஆகிய நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

வாழ்வியல் வசந்தங்கள் எனும் இவரின் நூல் பாகம் – 01 – பாகம் -18 வரை வெளிந்துள்ளன.

விருதுகள்

தமிழ்ப் பாடல் பிரிவில் சிறப்புப் பரிசு- கலாசார அமைச்சினால் தொடர்ந்து நான்கு ஆணடுகள்.

சிறுவர் இலக்கியத்திற்கான முதலாம் பரிசு – 2005, 2006.

கொழும்பு மாவட்ட சிறுகதைப் போட்டியில் விசேட சிறப்புப் பரிசும், பாடலுக்கான சிறப்புப் பரிசு உட்பட ஒரே தடவையில் மூன்று பரிசுகள் – 2008.

கலாபூஷணம் - 2009.

வளங்கள்

  • நூலக எண்: 15472 பக்கங்கள் 5-7
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வயிரவநாதன்,பா&oldid=393402" இருந்து மீள்விக்கப்பட்டது