ஆளுமை:சேதுபதி, பொன்னையா
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:45, 11 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சேதுபதி |
தந்தை | பொன்னையா |
பிறப்பு | 1939.03.29 |
ஊர் | முல்லைத்தீவு, வட்டுவாகல் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சேதுபதி, பொன்னையா (1939.03.29) முல்லைத்தீவு வட்டுவாகலில் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை சேதுபதி; 1951ஆம் ஆண்டு கலைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார்.
பன்னிரண்டு வயது முதல் பாடசாலையில் நாடகங்களில் நடித்து பாராட்டு பெற்ற இவர் தொபியாஸ் எனும் முழு நீள நாடகத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து மேடையேற்றி ஞானப்பிரகாச சுவாமிகளின் பாராட்டையும் பெற்றார்.
பார் மகளே பார்', மறுமலர்ச்சி, மைந்தன், நான் துரோகி, எனக்கா மன்னிப்பு, எங்களுக்கும் காலம் வரும், பாசமா, தீர்ப்பு, போன்ற சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார். சரித்திர நாடங்களான ஸ்ரீ வள்ளி, சிலையெடுத்த செம்மல் போன்ற நாடகங்களையும் எழுதி மேடையேற்றியுள்ளார். 2001-2004ஆம் ஆண்டு வரை கனடாவில் வசித்த காலப் பகுதியில் 30 வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். பண்டாரவன்னியன் நாடகத்தில் பண்டார வன்னியனாக நடித்து பாராட்டை பெற்றுள்ளார்.
விருதுகள்
சிம்மக்குரலோன்
கலாபூஷணம்
முல்லைச்சான்றோன்
ஆளுநர் விருது முல்லைப் பேரொளி விஸ்வகலா கீர்த்தி