ஆளுமை:துஷ்யந்தி, தியாகராஜா
பெயர் | துஷ்யந்தி |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர், இசைக்கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
'துஷ்யந்தி, தியாகராஜா கொழும்பில் பிறந்த பெண் ஆளுமை கலைஞர். இவரின் தந்தை கொக்குவிலையும் தாயார் உரும்பிராயையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கலைத்துறைக்குள் ஆறு வயதில் பிரவேசித்த இவர் தனது பதினைந்து வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தார். இராமநாதன் நுண்கலைக் கல்லூரியிலும் யாழ் பல்கலைக்கழகத்திலும் பரதநாட்டியம் பயின்று நாட்டிய கலைமணி பட்டம் பெற்றார். யாழ் பல்கலைக்கழத்தில் வாய்ப்பாட்டோடு வீணையும் கற்றார். வட இலங்கை கீழைத்தேய சங்கீத சபையில் வீணையில் ஆசிரியர் தரத்தில் சித்தி பெற்றார்.
கீழைத்தேய நுண்கலைப் பரீட்சை சபை (OFAAL) ஆரம்ப காலம் முதல் வாத்தியப் பிரிவின் தலைமை ஆசிரியராக கடமை புரிகிறார். வீணை வயலின், வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், மிருதங்கம் போன்ற அனைத்திலும் பாண்டித்தியம் பெற்றவராகக் காணப்படுகிறார். வீணை, வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் கற்பிப்பதோடு கீழைத்தேய நுண்கலைப் பரீட்சைச் சபையில் ஓர் அனுபவம் மிக்கவரும் மாணவர்களை பரிசோதிக்கக்கூடிய மூத்த பரிசோதகராகவும் உள்ளார். இரண்டு பகுதிகளாக அறிமுறை (Theory) நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந் நூல்கள் ஐக்கிய இராச்சியத்திலும் ஐரோப்பா முழுவதிலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு நூலாகும்.
கீழைத்தேய நுண்கலைப் பரீட்சைச் சபையில் உறுப்பினராக விளங்கும் அதேவேளை பரீட்சை வினாத்தாள்களை தயார் செய்வதிலும் அறிமுறை செயல்முறை பரீட்சைகளைக் கண்காணிப்பதிலும் பரீட்சை விதிமுறைகளை நடத்துவதிலும் பாடங்களை விரிவுரை செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.