ஆளுமை:பஹ்மியா, ஷரீப்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:53, 26 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பஹ்மியா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஹ்மியா
தந்தை அப்துல் மனாப்
தாய் சம்சுல் ஆரியா
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு காத்தான்குடி
வகை எழுத்தாளர், சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

'பஹ்மியா, ஷரீப் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை அப்துல் மனாப்; தாய் சம்சுல் ஆரியா. பாடசாலைக் காலம் முதல் இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது 13ஆவது வயதில் காத்தான்குடியில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளிவாசல் தாக்குதலை பின்னணியாக வைத்து காத்திரு மகனே எனும் தலைப்பில் கவிதையை எழுதியதன் ஊடாக பலரின் பாராட்டை பெற்றார். இக் கவிதை முஸ்லிம் தேசம், சல்லடைத்தேசம், நேசன் முதலிய சஞ்சிகைகளில் பிரசுரமாகியதாகத் தெரிவிக்கின்றார் பஹ்மியா. மேலும் இக்கவிதை முஸ்லிம் குரல், மீள்பார்வை, புதிய நாளை, விடிவெள்ளி, எங்கள் தேசம், தினமுரசு, வார உரைகல் முதலிய பத்திரிகையிலும் நேசம், நிஜம், இமயம், ஸம்ஸம் முதலிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. காத்தான்குடி கலாசார மத்திய நிலையத்தில் போதனாராசிரியராக கடமையாற்றி வருகிறார். பாடலாக்கம், சிறுகதை, கவிதைகள் பிரதேச, மாவட்ட மட்டப் போட்டிகளில் விருதுகளையும் சான்றிதழ்களையும் நினைவுச் சின்னங்களையும் பெற்றுள்ளார்.

கடந்த 20 வருடங்களாக ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் சமாதான செயற்பாட்டாளராகவும் கடமையாற்றி வருகிறார். தனியார் முன்பள்ளி ஒன்றினை நிர்மானித்து அதன் அதிபராக கடந்த 19 ஆண்டுகளாக கடமையாற்றி வருகிறார். விடிவெள்ளி தேசிய பத்திரிகையில் கடந்த நான்கு வருடங்களாக சரியாச் சொன்னீங்க மாமி எனும் தலைப்பில் பத்தி ஒன்றியையும் எழுதி வருகிறார். இதுவரை 323 வாரங்களாக இப்பத்தியானது வாராந்தம் தொடர்ச்சியாக வெளிவருகிறது. சமாதான செயற்பாட்டு சர்வதேச பயிற்சி நெறியினை ஜேர்மனியிலும் பெண்கள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச பயிற்சி நெறியினை அமெரிக்காவிலும் பூர்த்தி செய்துள்ளார்.

விருதுகள்

பிரதேச கலாசாரப் பேரவையின் விருது

குறிப்பு மேற்படி பதிவு 'பஹ்மியா, ஷரீப் அவர்களின் தகவலை அடிப்படையாகக் கொண்டது.

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பஹ்மியா,_ஷரீப்&oldid=389460" இருந்து மீள்விக்கப்பட்டது