ஆளுமை:பிருந்தாயினி, பிரபாகரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:58, 13 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிருந்தாயினி
தந்தை பிரபாகரன்
தாய் திலகவதி
பிறப்பு 1993.03.06
ஊர் யாழ்ப்பாணம் கொக்குவில்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிருந்தாயினி, பிரபாகரன் (1993.03.26) யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்த ஓவியர். இவரின் தந்தை பிரபாகரன்; தாய் திலகவதி. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஓவியம், தையல்கலை, அழகுக்கலை, சிற்பம், மரச்செதுக்கல் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர். ஒரு வருடம் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் தற்பொழுது தொழில்முனையும் பெண்ணாக அடையாப்படுத்தப்படுகிறார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் இவர் தனது ஆக்கங்களைக் காட்சிப்படுத்தியுள்ளதுடன் இந்தியாவிலும் பல இடங்களில் பிருந்தாயினி தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். இலண்டன், இலங்கை விம்பம் அமைப்பின் ஊடாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பள்ளி மாணவர்களின் கண்காட்சிகளில் பங்குபற்றியுள்ளார். பிரான்சில் இயங்கும் நடு அமைப்பிற்கு ஓவியராக ஆக்கங்களை வரைந்து கொடுத்துள்ளார். இவரின் ஓவியங்கள் அரசியலை பேசும்பொருளாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் பெரும்பான்மையான ஒவியங்கள் தன்னுருவப்படங்களை தனி மனிதர்களுக்கு வரைந்து கொடுத்துள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு பிருந்தாயினி, பிரபாகரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்