ஆளுமை:டயாழினி, இராசதுரை

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:26, 29 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டயாழினி
தந்தை இராசதுரை
தாய் கோகிலாம்பாள்
பிறப்பு
ஊர் கிளிநொச்சி, திருவையாறு
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


டயாழினி, இராசதுரை கிளிநொச்சி திருவையாற்றில் பிறந்த ஓவியக் கலைஞர். இவரின் தந்தை இராசதுரை; தாய் கோகிலாம்பாள். ஆரம்ப, இடைநிலைக் கல்வியைத் திருவையாறு மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். தற்போது யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்கின்றார்.

சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள இவர் சிறு நாட்காட்டிகளில் வந்த அம்மன் திருவுருவங்களைப் பார்த்து வரைவதே இவரின் பொழுதுபோக்காக ஆரம்பித்து பின்னர் இறைவனி்ன் திருவுருவங்களை ஓவியமாக வரைந்து வந்துள்ளார். சித்திரப்பாடத்தை கற்க நினைத்திருந்தாலும் 8ஆம் வகுப்பு வரையே அது சாத்தியமாக இருந்தது. பின்னர் இவரின் இந்தக் கனவு உயர்தரத்திலேயே சாத்தியமாயிற்று என்கிறார். 2015-2020 வரையான காலப்பகுதிக்குள் 7 சித்திரங்களுக்கு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் சித்திரத்துக்கு அப்பால் புகைப்படம் எடுத்தல், சங்கீதத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர்.

வெளி இணைப்புக்கள்