ஆளுமை:'ரூபினி, வரதலிங்கம்
பெயர் | ரூபினி |
பிறப்பு | |
ஊர் | ஊரை்காவற்றுறை காவலூர் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரூபினி, வரதலிங்கம் யாழ்ப்பாணம் காவலூரில் பிறந்த பெண் ஆளுமை ஆவார். ஆரம்பக் கல்வியை மகாதேவா சுவாமிகள் பிடியரிசி மூலம் கட்டடப்பட்ட பாடசாலையான சண்முகநாத வித்தியாலயத்திலும், இடைநிலை, உயர்நிலைக் கல்வியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்றார். சிறுவயதிலேயே தந்தையை இழந்துள்ளார். பாடசாலைக்ம் காலத்திலேயெ இலக்கியம், பரதநாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். மாணவ தலைவியாக, கலாசார, சமய, விஞ்ஞான மன்றங்களின் தலைவர் செயலாளர் பதவிகளிலும் இவர் இருந்துள்ளார். இந்தியாவில் இளமாணிப் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பொது முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம், முகாமைத்துவம் ஆகிய துறைகளில் டிப்ளோமா பட்டங்களையும் பெற்றுள்ளார். பொது நிர்வாக துறையில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
நாடு திரும்பிய பின்னர் யாழ்ப்பாணத்தில் தான் கல்வி கற்ற பாடசாலையில் சேவையில் இணைந்து ஆசிரியராக கடமையாற்றி தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாண சபை பட்டதாரி ஆட்சேர்ப்பின் அடிப்படையில் முகாமைத்துவ பயிலுனராக கடமையாற்றி இலங்கை நிர்வாகச் சேவை போட்டிப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்தார். 1991ஆம் ஆண்டு முதலாவது நியமனமாக கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி உதவி அரசாங்க அதிபராக ஆரம்பித்தார். தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் சங்கானை, சண்டிலிப்பாய் ஆகிய செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் பிரதேச செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாண சபையில் பணிப்பாளர், சிரேஷ்ட உதவிச் செயலாளர், செயலாளர் பதவிகளையும் வகித்துள்ளார். 22 வருடங்கள் அரச சேவையில் பிரதேச, மாவட்ட, மாகாண மாகாண மட்டங்களில் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 43030 பக்கங்கள் 14-15