ஆளுமை:இராஜேஸ்வரி, பா
பெயர் | இராஜேஸ்வரி |
தந்தை | பாலசுப்பிரமணியம் |
பிறப்பு | 1920.02.24 |
இறப்பு | 1972.10.24 |
ஊர் | திருகோணமலை |
வகை | பெண் இசை கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராஜேஸ்வரி, பாலசுப்பிரமணியம் (1920.02.24) திருகோணமலைியல் பிறந்த பெண் ஆளுமை ஆவார். இவரது தந்தை பாலசுப்பிரமணியம்; தனது கல்வியை திருகோணமலை ஸ்ரீ சண்முக வித்தியாலயம், புனித மரியாள் கல்லூரி, யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் வாய்ப்பாட்டு, வீணை ஆகிய இருதுறைகளிலும் டிப்ளோமா பட்டம் பெற்று 1942ஆம் ஆண்டு இலங்கை திருப்பினார். திருகோணமலையில் இருந்து இலங்கை வானொலியில் பங்குபற்றிய முதலாவது இசைக்கலைஞர் இவராவார்.
1947ஆம் ஆண்டு திருகோணமலை தெக்ஷிணகானசபாவை ஆரம்பித்து இலவசமாக நடத்தினார். தமது சொந்த இல்லத்தையே பாடசாலையாக்கி இசைக்காக உழைத்த பெண்மணி. திருகோணமலையில் கடமை புரியும் சங்கீத ஆசிரியர்களில் 95வீதமானோர் இவரால் உருவாக்கப்பட்டவர்கள். இவர்கள் இசை சார்ந்த உயர் பதவிகளையும் வகிக்கின்றனர்.
வாய்பாட்டு மட்டுமின்றி வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், சித்தார் போன்ற வாத்தியங்களையும் தெக்ஷிணகானசபாவின் ஊடாக பயிற்றுவித்தார். நாடகம், நடனம் போன்ற துறைகளிலும் மாணவர்களை வளர்த்தவர். இவர் இசையுடன் மட்டும் நின்று விடாது சமூக சேவகியாகவும் தன்னை வெளிப்படுத்தினார்.