ஆளுமை:தங்கம்மா, சந்திசேகரம் முருகுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:24, 17 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= தங்கம்மா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தங்கம்மா |
பிறப்பு | 1931.06.01 |
ஊர் | ஆரையம்பதி |
வகை | கிராமியக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தங்கம்மா, சந்திசேகரம் முருகுப்பிள்ளை (1931.06.01) ஆரையம்பதியில் பிறந்த கிராமியக் கலைஞர். இவர் சிறுவயதிலிருந்தே கிராமியக்கலையில் ஈடுபட்டுவருகின்றார். கரகம், கொம்புமுறிநடனம், காவடிஆட்டம், ஏனைய கிராமிய நடனங்களை இவர் தயாரித்துள்ளார். 1954ஆம் ஆண்டிலிருந்து காவடிப்பாடல், ஊஞ்சல்பாடல், தாலாட்டுப்பாடல், கவி என்பவற்றைப் பாடிவந்ததுடன் இவற்றைப்பதிப்பித்தும் உள்ளார். 1971இல் வானொலிக்கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டு 1980 வரை கிராமியப் பாடல்கள், கிராமிய நாடகங்களை பாடியுள்ளார். வடமோடி, தென்மோடி கூத்துகளைத் தயாரித்துள்ளதுடன் 1980இல் அலங்காரரூபன் தென்மோடிக்கூத்தில் நடித்துள்ளார். நாடகக் கலைஞரான ஆரையூர் இளவலுடன் இணைந்து பல நாடகங்களை நடித்துள்ளார். இவர் தயாரித்துள்ள பல நிகழ்ச்சிகள் தமிழ்தினப்போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றுள்ளன.