ஆளுமை:தேவராஜா, கலாலக்ஷ்மி

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:30, 6 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலாலக்ஷ்மி
தந்தை மாணிக்கவாசகர்
தாய் தங்கம்மா
பிறப்பு 1957.07.10
இறப்பு 2019.03.28
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவராஜா, கலாலக்ஷ்மி (1957.07.10) யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் பிறந்த எழுத்தாளர், இவரது தந்தை மாணிக்கவாசகர்; தாய் தங்கம்மா. ஆரம்பக் கல்வியை பண்டத்தரிப்பு இந்து கல்லூரியிலும் இடைநிலை, உயர் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக கலைமாணி பட்டம் பெற்றுள்ளார். இவரின் கணவர் சட்டத்தரணி சோ.தேவராஜா ஒரு எழுத்தாளராவார். நாடகம், கவிதை, கட்டுரை, பாடுவதென பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர் தனது 40ஆவது வயதில் எழுத்துத்துறையில் பிரவேசித்ததுடன் இவர் மூன்று சிறுகதை நூல்களை ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளார். ரூபவாஹினி தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். 1990ஆம் ஆண்டு இலங்கை நாடகக்குழுவினால் தமிழ்நாட்டில் மேற்கொண்ட நாராய் நாராய் என்ற சுற்றுலாக்குழுவில் இவரும் அங்கம் வகித்தமை விசேட அம்சமாகும்.

படைப்புகள்

  • ரோசாப்பூ (சிறுகதைத் தொகுதி)
  • பூமராங் (சிறுகதைத் தொகுதி)
  • மகரகாவியம் (சிறுகதைத் தொகுதி)

குறிப்பு : மேற்படி பதிவு தேவராஜா, கலாலக்ஷ்மி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.