ஆளுமை:விஜிதவாணி, விஜயகுமார்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:03, 30 ஜனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விஜிதராணி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜிதராணி
தந்தை விஜயகுமார்
தாய் நாகேஸ்வரி
பிறப்பு
ஊர் திருவையாறு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜிதவாணி, விஜயகுமார் கிளிநொச்சி மாவட்டம் திருவையாற்றில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை விஜயகுமார்; தாய் நாகேஸ்வரி.ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை திருவையாறு மகாவித்தியாயத்தில் கல்வி கற்றார். கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இளம் நுண்கலைமாணி பட்டத்தை பரதநாட்டியத்தில் பெற்றுள்ளார்.

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற பல பரதநாட்டிய போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளையும் பரிசில்களையும் பெற்றுள்ள இளம் பரத நாட்டிய கலைஞரான விஜிதவாணி அவர்கள் சர்வதேச ரீதியான அங்கோவாட் கலை கலாசார பாரம்பரிய நிகழ்ச்சியில் 2009ஆம் ஆண்டு கலந்துகொண்டுள்ளதுடன் வட சென்னை இசைவிழா பரதநாட்டியம் தனி குழு பங்குபற்றி கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார். சின்னமேளம் கலைகலாசார கதம்ப நிகழ்ச்சி, வடசென்னை இசை விழா கலைகலாசார நிகழ்ச்சி ஆகியவற்றில் 2018ஆம் ஆண்டு கலந்துகொண்டுள்ளார். அஞ்சலி நாட்டியாலயா பெரம்பலூர் தமிழ்நாடு இந்தியா 2019ஆம் ஆண்டு நடன பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டுள்ளார்.

விருதுகள்

நாட்டியகலைமணி மயிலாப்பூர் சென்னை இந்தியா 2018

நாட்டிய செல்வி படைப்பாளர் சங்கமம் அரக்கோணம் தமிழ்நாடு இந்தியா2019.

நிருத்தியவாணி ஈழஜாதிகல் நடனக்கதம்பம் கோவை இந்தியா 2019.

பரதகலைமணி கம்போடியா அங்கோவாட் 2019.

நாட்டியசுடர்மணி முத்தமிழ் நகர் தமிழ்நாடு இந்தியா 2019.


குறிப்பு : மேற்படி பதிவு விஜிதவாணி, விஜயகுமார் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.