ஆளுமை:சாய்ராணி, கிருஸ்ணராஜா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:44, 22 ஜனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாய்ராணி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாய்ராணி
தாய் கும்ளாமுனை
பிறப்பு
ஊர்
வகை பெண் ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாய்ராணி, கிருஸ்ணராஜா முல்லைத்தீவு மாவட்டம் கும்ளாமுனையில் பிறந்த பெண் ஆளுமை தற்பொழுது புதுக்குடியிருப்பில் வசித்து வருகிறார். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது கணவரை இழந்துள்ளார். பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் தொழில்முனையும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவர் இல்லாததால் சுயதொழிலில் ஈடுபட வேண்டும் என்ற சூழலிலேயே தொழில் ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் அப்பம் சுட்டு விற்பதையே தனது தொழிலாக ஆரம்பித்தார். 2012ஆம் ஆண்டு மீள் குடியமர்ந்துள்ளார். அதன் போது தேங்காய், மரக்கறி, பழங்கள் என பெட்டிக்கடை ஒன்றின் மூலம் விற்பனை் செய்து வந்துள்ளார். இக்காலப் பகுதியில் சோஆ(SOA)இன் உதவியுடன் பலசரக்குக் கடையொன்றை ஆரம்பித்துள்ளார். சிறுவர்கள் மிகவும் விரும்பி உண்ணும் Tip Tip எனப்படும் சிற்றுண்டி இரசாயனப்பொருட்கள் கலந்து உற்பத்தி செய்யப்படுவதால் அதனை இயற்கையான முறையில் தயாரிக்க ஆரம்பிப்போம் என்ற சிந்தனை தோன்றியது. இதன் பிரதிபலனாக அப்பளம் வடிவில் இதனை தயாரித்துள்ளார் இது பொரித்தால் டிப்பி டிப்பி போல் இருக்கும். இதில் எந்தவித இரசாயனமும் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதியளிக்கிறார். வல்லாரைக் கீரை இதில் சேர்க்கப்பட்டுள்ளமை விசேடமாகும். பல தோல்வியின் பின்னரே இவரின் உற்பத்திக்கு தகுந்த அடையாளம் காணப்பட்டது.

ஆயுள்வேத உற்பத்திப் பிரிவில் இவரின் உற்பத்தி பொருளுக்கு முதலிடம் கிடைத்த அதேவேளை ஏனைய உற்பத்திகளுக்கு இரண்டாமிடமும் தேசிய ரீதியில் கிடைத்தது.

வல்லாரை, குறிஞ்சா, கறிவேப்பிலை. மூலிகை இலைகள் என்பவற்றில் அப்பளம், சத்துமா, ஜுஸ், கோடியல் போன்றவற்றை தயாரித்து வருகிறார். இவரின் உற்பத்திகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். சது ஸ்டார் கைத்தொழிலகம் எனும் பெயரில் தொழிலகத்தையும் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு எனும் முகவரியில் மேற்கொண்டு வருகிறார்.

வெளி இணைப்புக்கள்