ஆளுமை:பேபி சரோஜா, அந்தோனிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 14 ஜனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பேபி சரோஜா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேபி சரோஜா
பிறப்பு
ஊர் மாவட்டபுரம்
வகை பெண் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேபி சரோஜா, அந்தோனிப்பிள்ளை யாழ்ப்பாணம் மாவட்டபுரம் வித்தகபுரத்தில் பிறந்த கலைஞர். சாஸ்திரிய கர்நாடக சங்கீதத்தை கொண்ட பாரம்பரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பேபி சரோஜா. இவருக்கு இரண்டு மகள் உள்ளனர். அவர்களும் இசையில் பட்டம் பெற்றவர்களாவர். பாடசாலை காலங்களில் மாவிட்டபுரம் நாதஸ்வர வித்துவான் சோ.உருத்திரபதி அவர்கள் இவரின் குரு. 1966ஆம் ஆண்டு மாவை முத்தமிழ்க் கலாமன்றத்தில் இசைக்கச்சேரி அரங்கேற்றம் செய்துள்ளார்.

1975ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்திய இசைத் தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு வருடம் இசைக்கச்சேரி செய்துள்ளார். இவரின் திறமையைப் பாராட்டி 1980ஆம் ஆண்டு வானொலி மஞ்சரியில் இவரின் போட்டோவை பதிவு செய்தது. முகப்படம் தலதா மாளிகையில் இருந்ததாகத் தெரிவிக்கின்றார். அனைத்துலக சைவ சித்தாந்த விழாவில் பங்கு கொண்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். மன்னாரில் உள்ள பத்து இந்து ஆலயங்களின் மகிமை பற்றி கதிரேசன் சிவம் அவர்கள் எழுதிய நூலில் நூறு பாடல்களுக்கு ராகம், தாளம், சுருதி அமைத்து கொடுத்துள்ளார்.

விருதுகள்

இசைத் தமிழ் மகள் பட்டம் – 2013ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட கலை இலக்கிய மன்றம்.

செழுங்கலை வித்தகர் விருது – நானாட்டான் பிரதேச கலாசார பேரவை.

அரச கலாபூஷண விருது – 2014ஆம் ஆண்டு.

வெளி இணைப்புக்கள்