ஆளுமை:லக்ஸ்மி சிவனேஸ்வரலிங்கம்
பெயர் | லக்ஸ்மி |
தந்தை | சிவனேஸ்வரலிங்கம் |
பிறப்பு | 1990.09.26 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | பெண் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
லக்ஸ்மி, சிவனேஸ்வரலிங்கம் (1990.09.26) யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைஞர். சிறுவயதிலேயே கனடா நாட்டுக்கு புலம்பெயர்ந்துள்ளார். மூன்று வயதில் இருந்து இசையைக் கற்று வருகிறார். தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகியான இவர் ஒரு பரத நாட்டியக் கலைஞருமாவார். யூடியூப், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவன்றின் ஊடாக இவரின் பாடல்களைக் கேட்கலாம் . அத்துடன் இவர் ஒரு மேடைப் பாடகியுமாவார். கனடாவில் பல மேடைகளிலும் பாடி வருகிறார்.
டொரன்ரோ பல்கலைக்கழகத்தில் மேற்கத்தைய செவ்வியலிசைத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடாக் கிளையில் கர்நாடக இசையில் பட்டம் பெற்றுள்ளார். தென்னிந்தியத் திரைப்படமான 2017ஆம் ஆண்டு வெளியான ”போகன்” திரைபடத்தில் டி.இமானின் இசையில் செந்தூரா என்ற பிரபல பாடலைப் பாடிப் புகழ் பெற்றுள்ளார். டிக் டிக் டிக் தமிழ்த் திரைப்படத்தின் தெலுங்கு மொழிமாற்றுத் திரைப்படத்தில் கண்ணையா என்ற பாடலையும் பாடியுள்ளார்.
விருதுகள்
ஐபிசி தமிழ் வானொலி நடத்திய இன்னிசை குரல் நிகழ்ச்சியில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.
2018ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான விஜய் விருது.
சிறந்த பின்னணி பாடகிக்கான சைமா விருது.
வெளி இணைப்புக்கள்
https://www.newsvanni.com/archives/106634 லக்ஸ்மி சிவனேஸ்வரலிங்கம் வன்னி இணையத்தில்]