ஆளுமை:சித்தி பரீதா, என்.எம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 8 ஜனவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சித்தி பரீத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்தி பரீதா
பிறப்பு
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சித்தி பரீதா, என்.எம் கண்டி நாவலப்பிட்டியில் பிறந்த எழுத்தாளர். 1965ஆம் ஆண்டு எழுத்துலகிற்குள் பிரவேசித்துள்ளார் சித்தி பரீதா. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை, தமிழ்ச்சேவை, பத்திரிகைகள் போன்றவற்றில் இவரின் நூற்றுக்கணக்கான ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. வானொலி நிகழ்ச்சிகளில் நேரடியாகவும் கலந்துகொண்டுள்ளார். கட்டுரை, சிறுகதை, நாடகங்கள் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.

வானொலியின் நெஞ்சோடு நெஞ்சம், மாதர் மஜ்லிஸ், ஊடுருவல், அனுபவச்சுடர், சமூக சித்திரம், புகைப்படக் கதைகள் அனைத்திலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. மலைக்குருவி, இலக்கியக் கருத்தா, புதுமை நேசன் ஆகிய கையெழுத்துப் பிரதிகளுக்கு ஆக்கங்கள் எழுதியுள்ளார். திருந்திய உள்ளம், பொய் முகமூடி, ஏக்கப் பெருமூச்சு, நெஞ்சில் நிறைந்த ரமழான், உண்மை தெரிந்த போது, திசைமாறும் தீர்மானங்கள், ஒரு உயிர் ஒரு ரூபாய் என்பன இவர் எழுதிய வானொலி நாடகங்களாகும். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சிறார்களுக்கு கல்வி புகட்டி வருகிறார்.

விருதுகள்

கலைச்செல்வி சிறப்புப் பட்டம் – 1975 மத்துகம கலாமன்றம் நடாத்திய விழாவில்.

ஒளித்தாரகை – 1986 தெல்தெனிய கலாமன்றம் நடாத்திய விழாவில்.

சமூகசேவகி கௌரவப்பட்டம் – 1998ஆம் ஆண்டு நாவல் நகர் பெண்கள்.

இரத்தினதீப விருது – 2003ஆம் ஆண்டு கண்டி மலையக கலை கலாசார பேரவை.

கலையரசி பட்டம் – 2005ஆம் ஆண்டு கண்டி லக்கி கலாமன்றம்.

2007ஆம் ஆண்டு நாவலப்பிட்டி அல்மதீனா நிலையத்தினரால் சிறந்த தயாரிப்பாளர் விருது.

இரத்ன தீபம் விருது - 2010ஆம் ஆண்டு.

ரன்ஜயபத விருது – 2014ஆம் ஆண்டு தேசிய சாஹித்திய விழாவில்.

அரச கலாபூஷணம் – 2017ஆம் ஆண்டு.