ஆளுமை:கமலாம்பிகை, கந்தசாமி

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:14, 29 டிசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கமலாம்பிகை|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கமலாம்பிகை
தந்தை கந்தையா
தாய் வாலாம்பிகை
பிறப்பு 1949.01.10
ஊர் முள்ளியவளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலாம்பிகை, கந்தசாமி (1949.01.10) முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்த கலைஞர். இவரது தந்தை கந்தையா; தாய் வாலாம்பிகை. கலைப் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனது பன்னிரெண்டு வயதிலேயே கலைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார்.

அண்ணாவியார் திரு.சூரி பொன்னையா அவர்களிடம் நாடகத்தையும், கர்நாடக சங்கீதத்தையும் கற்ற இவர் அண்ணாவியாரினால் நெறியாள்கை செய்த சீதா கல்யாணம், வீர அபிமன்யு, அரிச்சந்திர மயான காண்டம் முதலான நாடகங்களில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனை அடக்கிய அரியாத்தை என்னும் நாடகத்தில் அரியாத்தை என்னும் பிரதான பாத்திரத்தை ஏற்று நடித்தார். நாட்டார் பாடல்களைப் பாடுவதில் சிறந்தவராக திகழும் இவர் ஆலயங்களில் தேவார, புராணங்களை பண்ணோடு பாடி வருகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு கமலாம்பிகை, கந்தசாமி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

விருதுகள்

கலைமதி விருது - இயல், இசை, நாடகமன்றத்தினால் வழங்கப்பட்டது.

கலாபூஷணம் விருது – 2014.