ஆளுமை:கிருஷ்ணவேணி, இரத்தினம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:08, 29 டிசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிருஷ்ணவேண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணவேணி
தந்தை நல்லையா
பிறப்பு 1956.06.05
ஊர் எஹலியகொடை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணவேணி, இரத்தினம் (1956.06.05) இரத்தினபுரி எஹலிகொடையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை நல்லையா; தாய். இரத்தினபுரி பலாங்கொடை கனகநாயகம் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கை வானொலியின் கல்விச் சேவையில் பணி புரிந்துள்ளார்.

பாசம், காதல், இயற்கை, மலையக மக்களின் பிரச்சினை, பெண் பாசம், பெண் உரிமை (பெண்ணியம்) சமூக அவலங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், உறவுகளின் விரிசல், சிறுவர் நலன்கள், விழிப்புணர்வு ஆகிய தளங்களில் தனது எழுதியுள்ளார். சிறுவயது முதலே வாசிப்பில் கொண்ட ஈடுபாடு காரணமாக எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். ஆரம்பத்தில் வானொலிக்கு ஆக்கங்கள் எழுதி வந்தார். குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இசையும் கதையும், பாட்டும் பரதமும், பூவும் பொட்டும், மங்கையர் மஞ்சரி, தேர்ந்த இசை, ஒலிமஞ்சரி ஆகிய நிகழ்சிகளிலும் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

இவரின் முதல் கவிதை சிந்தாமணி பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோநியூஸ், உதயசூரியன் ஆகிய நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை, வர்த்தக சேவை, ஊவா சமூக வானொலி, பிறை எப்.எம், வசந்தம் எப்.எம் தமிழ் வானொலி ஆகியவற்றிலும் முகநூலிலும் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன.

கவிதை, சிறுகதை, விமர்சனம் எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் கிருஷ்ணவேணி. மலையக மன்றத்தினால் நடத்தப்பட்ட கவிதை போட்டி, பிரதேச, மாகாண சபைகளினால் நடாத்தப்படும் கவிதை, சிறுகதை, பாடல் ஆக்கப் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டு சான்றிதழ்களும், பரிசில்களும் பெற்றுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றியுள்ளார். சிங்களப் படத் தயாரிப்பாளர் பெனட் ரட்நாயக்க தயாரித்த நெலா என்ற சிங்கள படத்திலும் நடித்துள்ளார். இப்படம் 2018ஆம் ஆண்டு வெளியானது.

ஊவா சமூக வானொலியில் ஒலிபரப்பாகும் கவிதை அரங்கேறும் நிகழ்ச்சியில் ஒரு மனிநேரம் கவிதை நிகழ்ச்சியும், பொங்கல், தீபாவளி, சிறப்பு கவிதை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். வானொலி, பத்திரிகைகளில் வந்த இவரின் ஆக்கங்களை தொகுத்து நூலாக வெளியிடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார். இவர் எழுதிய பாடல்களை இசையமைத்து வெளியிட ஆவலாக உள்ளார்.


குறிப்பு : மேற்படி பதிவு கிருஷ்ணவேணி, இரத்தினம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.