ஆளுமை:ஹிம்ஸானா அ.ஹ
பெயர் | ஹிம்ஸானா |
தந்தை | அப்துல் ஹகீம் |
தாய் | றகுமா வீவீ |
பிறப்பு | 1993.09.28 |
ஊர் | அக்கரைப்பற்று |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஹிம்ஸானா அ.ஹ (1993.09.28) அம்பாறை அக்கரைப்பற்றில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் ஹகீம்; தாய் றகுமா வீவீ. அக்கரைக்குயில் எனும் புனைபெயரில் தன்னை அடையாளப்படுத்துகிறார். அக்கரைப்பற்று காதிரியா வித்தியாலயம், அக்கரைப்பற்று முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். வறுமையின் காரணமாக கல்வியை இடைநிறுத்தியதாகத் தெரிவிக்கிறார் ஹம்ஸானா.
பதினொரு வயதில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். பாடல், சிறுகதை, புதுக்கவிதைகள் என எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் தினகரன் நாளிதழில் வெளிவந்துள்ளன. முகநூல் குழுமங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கலாசார திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாவட்ட மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வரும் இவரின் ஆக்கங்கள் பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. இவரின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்று மூக்குத்திபூக்கள், களவு போன தூளி எனு்ம் பெயரில் நூல்களாக மிக விரைவில் வெளியாகவுள்ளது. முகநூல் குழுமங்களால் நடத்தப்படும் கவிதை பாடல் ஆக்கம் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசில்களையும் பாராட்டுக்களையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
விருதுகள்
பாவிளக்கு பட்டம் – 2018ஆம் ஆண்டு உலகப் பாவலர் மன்றம். - கவிச்சிகரம் பட்டம் - கவியுலகப் பூஞ்சோலை குழுமம். கவித்திலகம் பட்டம். ஈழக்குயில்பட்டம். கவிக்காதலி பட்டம்.
குறிப்பு : மேற்படி பதிவு ஹிம்ஸானா அ.ஹ அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.