ஆளுமை:கமலாதேவி, ஞானதாஸ்'

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:22, 25 டிசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கமலாதேவி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கமலாதேவி
தந்தை ஐயாத்துரை
தாய் புவனேஸ்வரி
பிறப்பு 1944.09.10
ஊர் தாமரைக்கேணி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலாதேவி, ஞானதாஸ் மட்டக்களப்பு தாமரைக்கேணியில் பிறந்த கலைஞர். இவரது தந்தை ஐயாத்துரை; தாய் புவனேஸ்வரி. 1958ஆம் ஆண்டு தனது 12 வயதில் மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தினரால் தொடங்கப்பட்ட நாட்டிய வகுப்பில் திரு.ம.கைலாயப்பிள்ளை நடன ஆசிரியரைக் குருவாகக் கொண்டு நடனம் பயில ஆரம்பித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் நடனப் பள்ளியில் பவானி இராசிங்கத்திடம் பிரத்தியேக பயிற்சியைப் பெற்றுள்ளார். கண்டி நுண்கலை மன்றத்தினரால் நடாத்தப்பட்ட நாட்டியப் பள்ளியில் நடன ஆசிரியராக நான்கு வருடம் கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து அடையார் கே.லக்ஷ்மன் அவர்களுடைய பரதசூடாமணி நாட்டிய நிறுவனத்தில் நான்கு வருடங்கள் பிரத்தியேக பயிற்சியை முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊரில் பரதகலார்ப்பணா நாட்டிய நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். பரதகலார்ப்பணா மாணவர்களின் மூலம் பல நிகழ்ச்சிகளை மேடையேற்றியுள்ளதுடன் நான்கு மாணவிகளின் அரங்கேற்றத்தையும் செய்துள்ளார்.

1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்து சமய கலாச்சார திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராக (நடனம்) இணைந்து கடமையாற்றியுள்ளார். இக்காலக்கட்டத்தில் கல்லூரியில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திணைக்களத்தால் கொழும்பில் நடாத்தப்படும் கலை நிகழ்வுகளில் கல்லூரி மாணவர்கள் நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார்.


குறிப்பு : மேற்படி பதிவு கமலாதேவி, ஞானதாஸ்' அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.