ஆளுமை:தேவகி, கருணாகரன்
பெயர் | தேவகி |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தேவகி, கருணாகரன் யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். தற்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் வசித்து வருகிறார். சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் ஆங்கில மொழியில் கல்வி கற்றார். தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் திறமையுள்ளவர். கணவனின் தொழில் நிமித்தம் நைஜீரியாவிற்கு புலம்பெயர்ந்து ஆங்கில ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
தனது 13 வயதி வயதிலேயே நாடகப் பிரதிகள் எழுதி சொந்தகங்களுக்கும் தோழிகளுக்கு முன்னாலும் அரங்கேற்றி மகிழ்ந்துள்ளார;. இவரின் இசையும் கதையும் படைப்புக்கள் பல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையின் ஊடாக ஒலிபரபப்பட்டது. இவரின் கதைகள் பல தினக்குரல், வீரகேசரி ஆகிய நாளிதழ்களிலும், கலப்பை, ஞானம், ஜீவநதி, கணையாழி, கலைமகள் ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவரின் முதல் கலப்பை சஞ்சிகையிலேயே வெளிவந்துள்ளது. Canadian Tamil Mirrior, <http://indianlink.com.au/>, <https://www.smashowrods.com> ஆகியவற்றிலும் இவரின் ஆங்கில சிறுகதைகள் வெளிவந்துள்ளன. தற்போது சிட்னி - தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தில் முக்கிய உறுப்பினராக இருக்கின்றார். இச் சங்கத்தில் பல நாடகங்களை எழுதி இயக்கியும் இருக்கின்றார். அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் SBS (Special Broadcasting Service) தமிழ்ப்பிரிவிலும், ATBC வானொலியிலும் இவரது பல சிறுகதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
படைப்புகள்
வளங்கள்
- நூலக எண்: 7347 பக்கங்கள் 41-57
- நூலக எண்: 7348 பக்கங்கள் 37-50
- நூலக எண்: 7349 பக்கங்கள் 22-30
- நூலக எண்: 7351 பக்கங்கள் 8-15
- நூலக எண்: 7357 பக்கங்கள் 30-41