ஆளுமை:நந்தீஸ்வரி, மாயவன்
{ஆளுமை| பெயர்=நந்தீஸ்வரி| தந்தை=துரைராசா| தாய்=சிறிரஞ்சனி| பிறப்பு=1980.02.04|.0 இறப்பு=| ஊர்=இணுவில்| வகை=எழுத்தாளர்| புனைபெயர்=| }}
நந்தீஸ்வரி, மாயவன் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை துரைராசா; தாய் சிறிரஞ்சனி. ஆரம்ப இடைநிலைக் கல்வியை பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை வவுனியா கோயில்குளம் இந்துக் கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தை வெளிவாரியாக முடித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுமாணிப் பட்டத்தை முடித்துள்ள எழுத்தாளர், அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வருகிறார்.
பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்த இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, பேச்சு என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் மித்திரன், சுடர்ஒளி ஆகிய நாளிதழ்களிலும் ஞானம், நறுமுகை, மாருதம், வவுனியா மருத முகிழ், ஜீவநதி ஆகியவற்றிலும் வெளிவந்துள்ளன. நறுமுகை சஞ்சிகையின் உதவியாசிரியராகவும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பத்திராதிபராகவும் வவுனியா மருத முகுழ் மலரின் மலர்க்குழு உறுப்பினராகவும் மாருதம் சஞ்சிகையின் உதவி ஆசிரியராக 2010ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இருக்கிறார்.
உயிர்க்கும் விழுதுகள் என்ற கவிதைத் தொகுதியை 2011ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். நிலவே நீ சொல் என்ற கவிதைத் தொகுப்பை 2015ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
விருதுகள்
2013ஆம் ஆண்டு வவுனியா பிரதேச செயலகத்தினால் கவிதைத்துறைக்கு பாராட்டும் விருதும்.
2019ஆம் ஆண்டு இளம் கலைஞர் விருது வவுனியா மாவட்ட கலாசார பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து வழங்கியுள்ளது.
குறிப்பு : மேற்படி பதிவு நந்தீஸ்வரி, மாயவன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.