ஆளுமை:புவனநாயகி, ஐயம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:52, 4 டிசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புவனநாயகி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவனநாயகி
தந்தை சின்னத்தம்பி
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1940.02.08
ஊர் முல்லைத்தீவு
வகை எழுத்தாளர்கள், கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புவனநாயகி, ஐயம்பிள்ளை (1940.02.08) முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்த கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி ; தாய் அன்னப்பிள்ளை. ஆரம்பக்கல்வியை முல்லைத்தீவு முள்ளியவளை இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை, உயர் கல்வியை முல்லைத்தீவு முள்ளியவளை எம் வித்தியானந்தா கல்லூரியிலும் கற்றார். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விசேட ஆங்கிலக் கல்வி கற்கை நெறியில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக கலைத்துறையில் பட்டம் பெற்றுள்ளார். திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா முடித்துள்ளார். இவரின் தந்தையார் ஒரு அண்ணாவியாவார். அதனால் சிறு வயது முதலே கலைத்துறையில் இவர் மிகவும் ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார்.

சங்கீதம், நாடகம், சமய சொற்பொழிவு, பண்ணிசை ஓதுதல், வில்லுப்பாட்டு என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் புவனநாயகி. இவரின் இரு சகோதரர்களும் கலைத்துறையைச் சார்ந்தவர்கள். புவனநாயகி ஆர்மோனியம் வாசிக்கும் திறமையைக்கொண்டவராவார். நாடகத்துறையில் நாடகப் பிரதியாக்கம், நடிப்பு, பக்கப்பாட்டு, பின்னணி இசை ஆகியவற்றிலும் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியதன் மூலம் இவரின் முல்லைத்தீவு முள்ளியவளை எம் வித்தியானந்தா கல்லூரி மாணவர்களின் ”பாஞ்சாலி சபதம்”, ”கண்ணகி வழக்கு” ஆகிய நாடகங்கள் 1978ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது. ”இடையண்ணன் கதை” இவர் மாணவர்கள் ஊடாக தயாரித்து வழங்கிய வில்லுப்பாட்டு இலங்கை வானொலியில் 25 தடவைகளுக்கு மேல் ஒலிபரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார். வரலாற்று ஆசிரியர் J Penry Lewis அவர்கள் எழுதிய Manual of the Vanni districts (Vavuniya and Mullaittivu) of the Northern Province, Ceylon எனும் ஆங்கில நூலை இலங்கையின் வன்னி மாவட்டங்கள் ஒரு கையேடு எனும் தலைப்பில் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலினை தமிழாக்கமாகக் கொண்டுவருவதற்கு பெரும் பங்காற்றியுள்ளார்கள் திரு ஐயம்பிள்ளை மற்றும் திருமதி புவனநாயகி ஐயம்பிள்ளை ஆகிய இருவரும்.

விருதுகள்

கலாபூஷண விருது – 2013ஆம் ஆண்டு

ஆசிய பிராந்தியத்தில் சிறந்த ஆசிரியர் விருது.

ஆங்கிலச் செல்வன் – வவுனியா நண்பர்கள் வட்டம் வழங்கியது.

தமிழ் முகில் எனும் பட்டத்தை இந்தியாவின் ஔவை தமிழ்ச் சங்கம் வழங்கியது.

மாத்தளை முத்துமாரியம்மன் – சைவப்புலவர் பட்டம்.


குறிப்பு : மேற்படி பதிவு புவனநாயகி, ஐயம்பிள்ளை அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


வளங்கள்

  • நூலக எண்: 15158 பக்கங்கள் iv-v