நிறுவனம்:யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:43, 19 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வடமராட்சி உடுப்பிட்டி
முகவரி வடமராட்சி உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி 0212-263 767
மின்னஞ்சல்
வலைத்தளம்


யாழ் மாவட்டத்தில் வடமராட்சிப் பிரதேசத்தில் உடுப்பிட்டியில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அமெரிக்க மிசனரியினால் ஆசியாவில் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது கல்லூரியாகும். 1868ஆம் ஆண்டு வைகாசி மாதம் 7ஆம் திகதி 17 மாணவர்களுடன் தங்குமிட வசதியுடன் அமெரிக்கப் பெண்மணி செல்வி ரியட் ரவுண்ஷன்ட் அம்மையாரால் ஆரம்பிக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு ஜீ.எம்.பி.வன்னியசிங்கத்தின் முயற்சியினால் முதல் முதலாக மின்சாரம் பெற்றுக்கொண்ட பாடசாலை என்ற பெருமைக்குரிய பாடசாலையாகும். கிறிஸ்தவ பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட போது இப்பாடசாலையில் பெரும்பான்மை இந்து மாணவர்களின் சமய அறிவையும் கலாசாரத்தையும் மரபையும் பேணும் வகையில் சைவ சமயப் பரீட்சைகள் மற்றும் போட்டிகள் இடம்பெறுகின்றன. 1976ஆம் ஆண்டு இப்பாடசாலையின் பாண்ட் வாத்தியம் உருவாக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு உயர்தர வகுப்பில் கலைத்துறைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுது. விஞ்ஞான ஆய்வுக்கூடம், நூலகம் போன்ற வசதிகளையும் இப்பாடசாலை கொண்டுள்ளது. கல்வித்துறை போன்று விளையாட்டுத்துறையிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 54592 பக்கங்கள் {{{2}}}