ஆளுமை:அருந்ததி, துரைராஜா
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:24, 5 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருந்ததி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | அருந்ததி |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | பெண் ஆளுமைகள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருந்ததி, துரைராஜா யாழ்ப்பாணத்தில் பிறந்த பெண் ஆளுமை. யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் கல்வி கற்றார். மனையியல் டிப்ளோமாவவை யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் முடித்துள்ளார்.
1970ஆம் ஆண்டு யாழ் அச்சுவேலி தொழிற் பேட்டையில் பழவகை பதனிடும் தொழிற்சாலையில் இரசாயன நிபுணராகவும் 1983ஆம் ஆண்டு முகாமையாளராகவும் கடமை புரிந்தார். கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நூல் நிலையத்திலும் பணியாற்றியுள்ளார். இவரது கலைக்கூடம் 1996ஆம் ஆண்டு பங்குனி மாதம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் போதனை நுட்பங்களைக் கண்டு ஜப்பான் பல்கலைக்கழகமும் அமெரிக்க பல்கலைக்கழகமும் இணைந்து 2005ஆம் ஆண்டு கௌரவ நிபுணத்துவப் பட்டம் வழங்கியுள்ளது. இவர், தையல் கலையின் நுட்பங்கள் பகுதி 1, தையல் கலையின் நுட்பங்கள் பகுதி 2 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7330 பக்கங்கள் {{{2}}}