ஆளுமை:சிவகாமசுந்தரி, அர்ச்சுனா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகாமசுந்தரி
பிறப்பு 1936
இறப்பு 2017.06.21
ஊர் புலோலி
வகை ஆளுமைகள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிவகாமசுந்தரி, அர்ச்சுனா யாழ்ப்பாணம் புலோலி மேற்கில் பிறந்து நியூசிலாந்தில் வசித்த பெண் ஆளுமை. பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் கற்று சட்டத்துறைக்குள் பிரவேசித்து 1972ஆம் ஆண்டு வழக்கறிஞரானார். 1988ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்று மல்லாகம், மன்னார், கொழும்பு நீதிமன்றங்களில் நீதிபதியாக கடமையாற்றினார். 1991ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக சேவையாற்றி இளைப்பாறிய சிவகாமசுந்தரி இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. திருகோணமலையில் சேவையாற்றிய காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்புப் பிரிவினை புதிதாக ஆரம்பித்து வைத்ததோடு காணி சம்பந்தமான பல வழக்குகளுக்கு தீர்வினையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.