ஆளுமை:வயலற் சறோஜா, சந்திரசேகரம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:35, 30 செப்டம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வயலற் சறோஜா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வயலற் சறோஜா, சந்திரசேகரம் மட்டக்களப்பில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை புனித சிசிலியாக் கல்லூரியிலும் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் இளவணிகமாணிப் பட்டத்தையும் நுகேகொட திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டபின் கல்வி டிப்ளோமா பட்டத்தையும், மதுரை காமராஜர் பல்கலைக்ழகத்தில் முதுவணிக சிறப்புமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

சிறந்த மேடைப் பேச்சாளர், சிறந்த வில்லிசைக் கலைஞர், நாடக எழுத்தாளர், நடிகர், பயிற்றுவிப்பாளர், ஒப்பனையாளர், நெறியாளர், கவிதை எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டுள்ளார். அத்தோடு சிறந்த சித்திரக் கலைஞர், விவாதப் போட்டிகளின் பயிற்றுவிப்பாளர், சிறந்த வானொலி எழுத்தாளர், சிங்கள மொழி பெயர்ப்பாளர், சிறார்களுக்கு கதைகூறுவது, சிறுவர் இலக்கிய நூலாசிரியர், சிறந்த பாடகர், சிறுகதை, கட்டுரை, விமர்சனங்கள் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் வயலற் சறோஜா. இவரின் இலக்கியத்திற்கு களம் அமைத்துக்கொடுத்தது ”தொண்டன்” எனும் சஞ்சிகையாகும். இச் சஞ்சிகையில் இவரின் கவிதைகள், கட்டுரைகள் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. அதிகளவான ஆக்கங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. எண் சோதிட ஜோதி எனும் இவரின் முதலாவது நூல் 1983ஆம் ஆண்டு பேராசிரியர் சு.வித்தியானந்தன் தலைமையில் வெளியிடப்பட்டது. இவரின் இந்நூல் முதல் பதிப்பிலேயே 2000 பிரதிகள் விற்பனையாகியமை விசேட அம்சமாகும். வாழ்க்கையை வளமாக்க வழி என்ன என்ற நூல் 1983ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கவின்கவி எனும் நூலையும் உளி எனும் இவரின் கவிதைத் தொகுப்பு நூல் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வயலற் சறோஜா சாணக்கியன் சஞ்சிகையின் ஆசிரியருமாவார். 100இற்கும் மேற்பட்ட சிறுககைளை எழுதியுள்ளார்.

விருதுகள்

2013ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதை பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 9774 பக்கங்கள் 12-14


வெளி இணைப்புக்கள்