ஆளுமை:லுதுபியா, அஹமது லுக்மான்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:01, 2 செப்டம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=லுதுபியா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லுதுபியா
தந்தை அஹமது லுக்மான்
தாய் பௌஸியா உம்மா
பிறப்பு
ஊர் காத்தான்குடி
வகை எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லுதுபியா, அஹமது லுக்மான் (1991.09.06) மட்டக்களப்பு, காத்தான்குடியை பிறப்பிடமாகவும் கம்பஹா கஹட்டோவிட்டோவை வசிப்பிடமாகவும் கொண்டவர் எழுத்தாளர். இவரது தந்தை அஹமது லுக்மான்; தாய் பௌஸியா உம்மா. ஆரம்பக் கல்வியை காத்தான்குடி மட்/மெத்தைப் பள்ளி பாடசாலையிலும், காத்தான்குடி மட்/மீராபாலிகா மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையிலும் கற்றார். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே எழுத்துத்துறையில் பிரவேசித்தார் எழுத்தாளர். பூ என்ற இவர் எழுதியதே இவரது முதலாவது கவிதையெனத் தெரிவிக்கின்றார் எழுத்தாளர். இவரது ஆக்கங்கள் தினகரன் வாரமஞ்சரி, தினக்குரல், விடிவெள்ளி, படிகள், வேகம் போன்றவற்றில் பிரசுரமாகியுள்ளன. இலத்தினியல் ஊடகமான சூரியன், சக்தி, தென்றல் ஆகிய பண்பலைகளில் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. உணர்வுகளின் ஓலம் எனும் கவிதை தொகுப்பு இவரின் முதலாவது நூலாகும்.