ஆளுமை:பூமலர், சிவராசா
பெயர் | பூமலர் |
தந்தை | சின்னத்தம்பி |
தாய் | பசுபதிப்பிள்ளை |
பிறப்பு | 1945.09.28 |
ஊர் | மண்டூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பூமலர், சிவராசா மட்டக்களப்பு மண்டூரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் பசுபதிப்பிள்ளை. ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர்கல்வி வரை மண்டூர் இராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையில் கற்றார். கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில் விவசாய டிப்ளோமா முடித்துள்ளார். இவர் ஒரு ஒய்வு நிலை விவசாயப் போதனாசிரியராவார். எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், பேச்சாளர், அறிவிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட பல்துறைக் கலைஞராவர்,. விவசாய ஒலிபரப்புச் சேவையில் முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளர். ஆயிரம் கவிஞர்கள் நூலிலும் இவரின் கவிதை வெளியாகியுள்ளது. போரத்தீவுப்பற்று கலசார பேரவையினால் நடத்தப்படும் போட்டியில் இவரின் பாடல், சிறுகதைக்கு பரிசுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் புதியமழை . என்ற எழுத்தாளருக்குரிய கௌரவும் இவருக்கு வழங்கப்பட்டது. ”சத்துணவு” என்னும் பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விருதுகள்
கலாபூசணம் இலக்கியமணி தேசமான்ய சத்யஜோதி
குறிப்பு : மேற்படி பதிவு பூமலர், சிவராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.