ஆளுமை:சிவபாக்கியம், குமாரவேல்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:24, 29 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவபாக்கிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாக்கியம்
தந்தை பழனிச்சாமி
தாய் பூமாலை
பிறப்பு 1923.07.05
இறப்பு 2019.01.05
ஊர்
வகை {{{வகை}}}
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாக்கியம், குமாரவேல் (1923.07.05) கலஹாவில் பிறந்த சமூகசேவையாளர் கண்டியை வசிப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை பழனிசாமி; தாய் பூமாலை. இவரின் தந்தை பிரபல தொழிற்சங்கவாதியாவார். சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக சமூகப் பணியாற்றியுள்ளார் சிவபாக்கியம். 1950களில் பெண்ணுலகு எனும் மாதர் இதழை தனது சொந்த முயற்சியில் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் அதன் ஆசிரியராக செயல்பட்டார். சிவபாக்கியம் குமாரவேல் 1944ஆம் ஆண்டு மலையகப் பெண்களுக்கு 6 மணித்தியாலயம் வேலை நேரம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். நேருவின் இலங்கை விஜயத்திற்குப் பின்னர் இந்திய வம்சாவழி மக்களின் மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்திய இலங்கை காங்கிரஸின் மாதர் பிரிவு இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கம் எனும் பெயரில் 1941ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவியாக லஷ்மி இராஜரத்தினம் அம்மையார் செயற்பட்டார். பெண் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், தைரியத்தையும், ஐக்கியத்தையும், சமத்துவத்தையும் வளர்க்க உருவாக்கப்பட்ட இவ் அமைப்பின் தலைவியாக பின்னர் சிவபாக்கியம் குமாரவேல் செயற்பட்டார். நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோருடன் நெருங்கிய நல்லுறவையும் சிவபாக்கியம் மேற்கொண்டார்.. மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர முன்னின்று உழைத்தவர்களில் ஒருவராவார். மலையக மாதர் இயக்கத்தின் முன்னோடியாகவும் சிவபாக்கியம் குமாரவேல் கருதப்படுகிறார். தீவிர சாய் பக்தையான இவர் ஹந்தான பிரதேசத்தில் ஷீரடி பாபா ஆலயத்தை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 2702 பக்கங்கள் 29-30