ஆளுமை:சகந்தினி, றஞ்சித்குமார்
பெயர் | சகந்தினி, றஞ்சித்குமார் |
தந்தை | செல்வராஜா |
தாய் | விமலாம்பிகை |
பிறப்பு | - |
இறப்பு | - |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | இசைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சகந்தினி, றஞ்சித்குமார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செல்வராஜா; தாய் விமலாம்பிகை. நாட்டியப் பாடத்தைக் கற்ற இவர் நுண்கலைத்துறை மாணவராக பல்கலைக்கழகம் சென்று 2002ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் நாட்டியமணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். வலயக் கல்வி அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார். அலுவலக நிகழ்வுகளில் பாடல்கள் பல பாடியுள்ளார்.
1997ஆம் ஆண்டு சஞ்சீமாதா ஆலய பெருநாள் கொண்டாட்டத்தின் போது சாரங்கா இசைக்குழுவில் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த இவர் பல நூறு பாடல்களைப் பாடி பல ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்திய பிரபலங்களான மனோரமா, அனுராதா, ஶ்ரீராம், மால்குடிசுபா ஆகியோரது குரல்வளத்தோடு பாடும் திறனுள்ளவராக இவர் திகந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1994ஆம் ஆண்டு பாரம்பரிய கலை மேம்பாட்டுக்கழகம் நடாத்திய இசை நாடகம், சிந்துநடைக்கூத்து ஆகியவற்றில் நடிகருக்கான விருதினையும் இவரது கலை இரசனைக்காக மெல்லிசைக் குயில் எனும் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.