ஆளுமை:கவிதாதேவி, சபாரட்ணம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:26, 26 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கவிதாதேவி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கவிதாதேவி, சபாரட்ணம்
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் ஆனைக்கோட்டை
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கவிதாதேவி, சபாரட்ணம் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த இசைக் கலைஞர். 1985ஆம் ஆண்டில் ரங்கன் இசைக் குழுவில் இணைந்து பிரபலமாகி பின்னர் கவிதாலாயா இசைக்குழுவில் பணியாற்றி தொடர்ந்து இளந்நென்றல் இசைக் குழுவிலும் இசைப் பணியாற்றியுள்ளார். தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் பாடும் தனித்திறமைப் பெற்ற இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட சில சிங்கள மொழித் திரைப்படங்களுக்கு குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் மேடை நாடகங்களுக்கு பின்னனி குரல் கொடுத்தல், தனி இசைக் கச்சேரி நடாத்தல் போன்ற துறைகளில் தனது ஆற்றலை வெளிக்காட்டியுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் ஒழுங்கு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் இந்தியப் பிரபலங்களான நடிகர்கள் நாகேஷ், ரவிசங்கர், ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு இவரது திறமையை பாராட்டி கவிக் குயில் கவிதா எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். மேலும் இவரின் கலைச் சேவைக்காக மெல்லிசைக் குயில் எனும் விருதினையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.