ஆளுமை:ரமாப்பிரியா, கருணைராசா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:07, 23 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரமாப்பிரியா
தந்தை கருணைராசா
தாய் மகேஸ்வரி
பிறப்பு 1992.10.24
ஊர் பாலம்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரமாப்பிரியா, கருணைராசா மன்னார் பாலம்பிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கருணைராசா; தாய் மகேஸ்வரி. ஆரம்பக் கல்வியை மன்/தட்சணாமருதமடு பாடசாலையிலும் இடைநிலை உயர்கல்வியை மன்/உயிலங்குளம் றோ.க.த.க பாடசாலையிலும் கற்றார். தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொது கலைமாணிப்பட்டப்பின் இரண்டாம் வருட மாணவியாகக் கற்றுக்கொண்டிருக்கிறார். சமுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இவர் 2006ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே எழுத்துத் துறையில் பிரவேசித்துள்ளார். பாடசாலையில் கற்கும் போதே தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு தூவானம் என்ற இவரின் முதலாவது கவிதை நூலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர். தற்பொழுது முக நூல் குழுமங்களின் ஊடாக எழுதி வருகிறார். சூரியன் எவ்.எம், சக்தி எவ்.எம், கனேடிய தமிழ் வானொலி, அவுஸ்திரேலிய தாயகம் வானொலி, டேன் தொலைக்காட்சி ஆகியவற்றின் கவிதை நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளார் எழுத்தாளர்.


படைப்புக்கள்

  • தூவானம் (கவிதை)


விருதுகள்

கனல்கவி – நிலாமுற்றம் முகநூல் குழுமம், காதல்கவிமணி - சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா, செந்தமிழ் கவிஞர் – செந்தமிழ்சாரல், கவிச்சிற்பி கண்ணதாசன் விருது, தஞ்சை பெரியகோபுரம் சிறப்பு விருது.

குறிப்பு : மேற்படி பதிவு ரமாப்பிரியா, கருணைராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.