ஆளுமை:றீற்றா, பற்றிமாகரன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:18, 10 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=றீற்றா, பற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றீற்றா, பற்றிமாகரன்
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றீற்றா, பற்றிமாகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்றுள்ளார். இளங்கலைமாணி பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், இள விஞ்ஞானமாணி பட்டத்தை பட்டங்களை ஒக்ஸ்வேர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்ட இவர் எழுத்தாளராகவும், ஆசிரியையாகவும், நூலாசிரியராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார். மாட்டின் டி பொரஸ் ஹொரணை, சென் யோசப் கல்லூரி கொழும்பு போன்றவற்றில் ஆசிரியராகப் பணியாற்றிய றீற்றா பற்றிமாகரன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலகத் தமிழ் உயர்தரத் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது நவீன காதல்'’, '‘நாடொன்று மீளப்பிறந்தது போன்ற சிறுகதைகள் தினமணி பத்திரிகையில் வெளியாகியுள்ளது. மேலும் புதியமுறையில் தமிழ் எழுதுதல், சிறுவர்க்கான தமிழ் மழலையர் பாடல்கள் கதைகள் ஒலிநாடா,பம்பி சிறுவர் வாசிப்பு நூல், தமிழ் செய்முறைப் பயிற்சி, தமிழ் பயிற்சி நூல், இலங்கைத் தமிழர்கள் வரலாறு கலாச்சாரம் பாரம்பரியம், இலக்கணத் தொகுப்பு, சங்ககாலத் தமிழர் வாழ்வும் கலைகளும் போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழைச் செம்மொழியாக்கலில் தொல்காப்பியத்தின் பங்களிப்பின் சிறப்பு, தேச உருவாக்கத்தில் சங்ககாலப் பெண்களின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தில் பெண் மாந்தர்கள் நிலை: தலைவி தோழி செவிலித்தாய் நற்றாய் பரத்தையர் போன்ற பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1984 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைச் சாகித்திய மண்டல இளம் எழுத்தாளருக்கான கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தை இவர் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.



இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்